முடக்கத்தான் தோசை (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆய்ந்த முடக்கத்தான் கீரை - 2 கை பிடி அளவு

புழுங்கல் அரிசி - 2 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை நான்கு மணிநேரம் ஊற வைக்கவும். மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாக பொடி செய்துக் கொள்ளவும். கீரையை ஆய்ந்து சுத்தமாக இரண்டு முறை கழுவிக் கொள்ளவும்.

ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் போட்டு அதனுடன் கீரையை போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்து கரைத்து 6 மணிநேரம் வைக்கவும்.

தோசை ஊற்றும் போது அரைத்த மாவுடன் மிளகு, சீரகப் பொடியை போட்டு கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவை ஒரு கரண்டி ஊற்றி தேய்த்து மேலே எண்ணெய் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்:

கார சட்னியுடன் பரிமாறலாம்.