மஷ்ரூம் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லிமாவு - 4 கப்
மஷ்ரூம் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தேங்காய் விழுது - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
கரம்மசாலா - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மஷ்ரூம், வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி, பிறகு தக்காளி, உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் மஷ்ரூம்களை சேர்த்துக் கிளறி, கடைசியில் கரம்மசாலா, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இட்லி தட்டுகளில் அரைக் கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் திறந்து, அதன் மேல் மஷ்ரூம் கலவையைப் பரவலாக வைத்து மேலும் அரை கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி மூடவும்.
நன்கு வேக விட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.