மரோக்கா பரோட்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டு ரவை (Sooji) - 1/2 கிலோ

மைதா மாவு - 100 கிராம்

வெதுவெதுப்பான தண்ணீர் - மாவு பிசைய

எண்ணெய் + வெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாத்திரத்தில் ரவையுடன் மைதா மாவைச் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பரோட்டா மாவைவிட சற்று தளர்வாக இருக்கும்படி நன்கு பிசையவும். எண்ணெய் + வெண்ணெயை சம அளவாக கலந்து வைக்கவும்.

மாவை உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் வெண்ணெயைத் தடவி வைக்கவும்.

மாவு உருண்டைகளில் ஒன்றை எடுத்து கைகளாலேயே மாவை மெல்லியதாக தேய்த்து வைக்கவும். (மாவு தளர்வாக இருப்பதால், பூரி கட்டை தேவையில்லை).

அதன் இருபுறமும் எண்ணெய் + வெண்ணெய் கலவையைத் தடவி, ரவை மாவை தூவி விட்டு, மேலிருந்து கீழாக இவ்வாறு மடிக்கவும். பிறகு அதன் எதிர்புறத்தையும் மேல் நோக்கி மடிக்கவும்.

பிறகு அதனை படத்தில் உள்ளவாறு மடித்து, அதன் எதிர்புறமும் மடிக்கவும். (தேய்த்த மாவை நான்கு புறமும் மடிக்க வேண்டும்). இதே போல் மீதமுள்ள உருண்டைகளையும் கைகளால் தளர்த்தி, ஓரங்களை மடித்து சதுரமான பரோட்டா போல் தயார் செய்யவும்.

தவாவை காயவைத்து, அதில் பரோட்டாவைப் போட்டு எண்ணெய் தெளித்து வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: