மரவள்ளி அடை 2

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக்கிழங்கு- கால் கிலோ

பச்சரிசி- அரை கிலோ

வற்றல் மிளகாய்- 8

தேங்காய்த்துருவல்- அரை மூடி

தேவையான உப்பு

பொடியாக அரிந்த வெங்காயம்- 1 கப்

பொடியாக அரிந்த கொத்தமல்லி- கால் கப்

கறிவேப்பிலை- சில இலைகள்

செய்முறை:

பச்சரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து வற்ரல் மிளகாய்களுடன் மையாக அரைக்கவும்.

துருவிய மரவள்ளிக்கிழங்கு, தேங்காய்த்துருவல், போதுமான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

ஐந்து மணி நேரம் மூடி வைத்து, அதன் பின் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து மெல்லிய அடைகளாக சுட்டெடுக்கவும்

குறிப்புகள்: