மரவள்ளிக்கிழங்கு குழாய் புட்டு

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு மாவு - 2 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கு மாவை வெறும் வாணலியில் மணம் வரும் வரை வறுக்கவும்.

ஆறியதும் உப்பு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கைகளால் உதிர்த்து பிசையவும்.

பிசைந்த மாவு உதிர் உதிராக ஆனால் பிடித்தால் பிடிக்க வர வேண்டும்.

புட்டு குழாயில் முதலில் சிறிது தேங்காய் போட்டு பின்னர் ஒரு இன்ச் உயரத்திற்கு மாவு பின்னர் தேங்காய் என மாற்றி மாற்றி போட்டு புட்டு பானையில் வைத்து வேக விடவும்.

புட்டு குழாயின் மேல் பாகம் ஆவி வரும் போது புட்டு வெந்து விடும்.

குறிப்புகள்:

சர்க்கரையுடன் பரிமாறவும்.