மரவள்ளிக்கிழங்கு உப்புமா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 1 கிலோ
தேங்காய் துருவல் - 3/4 கப்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கிழங்கினை தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து அதில் வெட்டிய கிழங்கினை சேர்த்து வேக விடவும். உப்பு சேர்க்க வேண்டாம்.
கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். மீண்டும் அளவாக தண்ணீர் சேர்த்து கிழங்கு குழையும் வரை வேக விடவும். குழைந்ததும் உப்பு சேர்த்து கிளறவும்.
அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து கிழங்கில் சேர்க்கவும்.
தேங்காய் துருவல் தூவி கிளறவும்.