மசாலா தோசை (5)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

முழு வெள்ளை உளுந்து - 1/2 கப்

காலிஃப்ளவர் - ஒரு பூ

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பாதாம் - 8

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

நெய் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும்.

காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

பிறகு ஒரு நிமிடம் கழித்து நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும்.

கொதி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் காலிஃப்ளவரை எடுத்து மசாலாவில் போட்டு கால் கப் தண்ணீரை தெளித்து பிரட்டி மூடி வைத்து இடையில் கிளறி விட்டு 10 நிமிடம் வேக விடவும்.

10 நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டியதும் திறந்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

தோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைமாவில் ஒரு மேசைக்கரண்டி உப்பு, துருவிய பாதாமில் பாதி அளவு எடுத்து சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்து அதில் ஒரு பாதியில் மீதம் இருக்கும் பாதாமை தூவவும். மற்றொரு பாதியில் செய்த மசாலாவை வைத்து மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.

2 நிமிடம் கழித்து வெந்ததும் பாதாம் தூவிய பகுதியை மடக்கி மேலே நெய் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு மொறு மொறுவென்று ஆனதும் எடுக்கவும்.

குறிப்புகள்: