மசாலா தோசை (3)
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - தேவையான அளவு
உருளைக்கிழங்கு - 250 கிராம்
மிளகாய் - 4 நறுக்கியது
வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி (மிகவும் மெல்லியதாக நறுக்கவும்) - ஒரு துண்டு
பொரிகடலை (பொடி செய்து கொள்ளவும்) - 2 மேசைகரண்டி
கொத்தமல்லி - சிறிது
கருவேப்பிலை - சிறிது
உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து வைக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிது தண்ணீர்விட்டு வெங்காயத்தை வேக விடவும்.
மஞ்சள்தூளும்,உப்பும் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீர் சற்றுவற்றியதும் உருளைக்கிழங்கு,கொத்தமல்லி இலை சேர்த்துகிளறி சற்று புரட்டினாற்போல் இறக்கி,பொரிகடலை மாவைத்தூவி கிளறி இறக்கவும்
தோசைக்கு தாயார் செய்யும் சட்னியை சற்று கெட்டியாக வைக்கவும்
தோசைக்கல்லில் தோசைமாவை ஊற்றி நைஸாக விரித்து திருப்பி போட்டு பின் எடுக்கும் சமயம் பாதி தோசையில் ஒரு கரண்டி மசால்கிழங்கையும்.சட்னியையும் விரித்து வைத்து மறுபாதி தோசையினால் மூடி பரிமாறவும்