மசாலா தோசை (2)
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 3 கப்
எண்ணெய் - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
மசாலா செய்வதற்கு:
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
தக்காளி - 1/2
வேக வைத்த பட்டாணிக்கடலை - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கார சட்னிக்கு:
வரமிளகாய் - 4
சின்ன வெங்காயம் - 8
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இப்பொழுது உள்ளே வைக்கப்போகும் மசாலாவையும், கார சட்னியையும் தயாரித்து வைப்போம்.
எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கடலைப்பருப்பு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளியை வதக்கி விட்டு மசிந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்த மசித்த கிழங்கு, பட்டாணி சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையும் சேர்த்து தீயை அணைத்து விடவும்.
தேவையெனில் இதில் ஒரு பச்சைமிளகாய் சேர்த்துக் கொண்டு காரச்சட்னியில் காரம் குறைத்துக் கொள்ளலாம்.
பின் காரச்சட்னி செய்ய பெஸ்ட் அம்மி தான். வரமிளகாயை ஒன்றிரண்டாக அரைத்து விட்டு அதில் வெங்காயத்தையும் வைத்து ஒன்றிரண்டாக அரைத்து உப்பும், தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலக்கி வைக்கவும்.
அம்மியில்லையென்றால் மிக்ஸியில் மிளகாய், வெங்காயம் போட்டு ஒரு சுற்று சுற்றி வைத்து விடுங்கள். பின் எண்ணெய், உப்பு சேருங்கள்.
இப்பொழுது தோசைக்கல்லில் தோசையை காகிதம் போல் மெல்லியதாக சுற்றி அதில் பாதி 3 தேக்கரண்டி கிழங்கு மசாலாவை வைத்து மறுபாதியில் அரை தேக்கரண்டி கார சட்னி வைத்து நெய்யை சுற்றிலும் ஊற்றி மூடி விடுங்கள்.
திருப்பிப் போடாமல் மூடியிட்டு வெந்ததும் இரண்டாக மடக்கி சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறுங்கள்.