ப்ரைடு நூடுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 1 பாக்

வெங்காயம் - 1

தக்காளி - 1

தக்காளி கெட்ச் அப் - 3 மேசைக்கரண்டி

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 3

எண்ணை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் நூடுல்சை வேக வைத்து நீரை வடிக்கவும்.

பின்னர் அதை எண்ணையில் பொரித்து தனியாக வைக்கவும்.

கடாயில் எண்ணை ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம்,தக்காளி ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக வதக்கி,உப்பு, கெட்ச் அப்பை சேர்த்து இறக்கவும்.

பின்னர் வதக்கியவற்றை பொரித்த நூடுல்சின் நடுவில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: