பொரி தோசை
0
தேவையான பொருட்கள்:
பொரி - 2 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புழுங்கல் அரிசியை 3 மணி நேரம் ஊற் வைத்து க்ரைண்டரில் மசிய அரைக்கவும். முக்கால் பதம் மசிந்ததும், பொரியை தண்ணீரில் அலம்பி பிழிந்து போட்டு அரைக்கவும். இக்கலவையில் தேவையான உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
மறு நாள் காலை தோசையாக வார்த்தெடுத்தால் பஞ்சு போல மிருதுவாக வரும்.