பெசரட் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முழுப்பயிறு - 1 கப்

பயத்தம் பருப்பு - 1/4 கப்

பச்சரிசி - 2 மேசைக்கரண்டி

துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 3

சீரகம் - ஒரு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முழுப்பயிறு, பச்சரிசி, பயத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாகவே தண்ணீரில் 1 - 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊற வைத்தவற்றை எடுத்து அதனுடன் ஒரு வெங்காயம், இஞ்சி மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

மீதியுள்ள வெங்காயங்களையும், பச்சை மிளகாய்களையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியைச் சூடாக்கி அதில் 3 தேக்கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இந்த தோசையை உடனேயே சுடலாம். சூடான தோசைக்கல்லில் மாவை ஊற்றிப் பரப்பி, அதன் மேல் வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் கலவையைத் தூவி, மூடி வைத்து வேகவிடவும்.

இந்த தோசையைத் திருப்பிப் போட்டு மறுபுறம் வேக வைக்கத் தேவையில்லை.

குறிப்புகள்: