பெங்களூர் மசால் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி அல்லது இட்லி அரிசி - 2 கோப்பை

பச்சரிசி - 1/2 கோப்பை

உளுந்து - 1/2 கோப்பை

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை

உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு

தேங்காய் அல்லது கார சட்னி - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உப்புத்தூள் - தேவையான அளவு

செய்முறை:

மேற்கூறியுள்ள பொருட்களில் அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து 4 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

பின்பு மிக்ஸியில் போட்டு ரொம்ப மையாக அரைய விடாமல் சற்று முன்னதான பதத்தில் எடுத்து உப்பைச் சேர்த்து இரவு முழுவதும் வைத்து புளிக்கவிடவும்.

பின்பு மாவில் ஆப்பச்சோடா மற்றும் சிறிது நீரைச் சேர்த்து சற்று தளர கலக்கவும்.

தோசைக் கல்லில் எண்ணெயைத்தடவி இளஞ்சூட்டில் காயவைத்து ஒரு கரண்டி மாவை எடுத்து மெல்லியதாக வார்த்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றவும். தோசை முழுவதும் வெந்ததும் எடுத்து விடவும், திருப்பி போட வேண்டாம்.

பின்பு அதன் மீது ஒரு தேக்கரண்டி தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியை தடவி நடுவில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்து இரண்டு புறமும் மடித்து, சாம்பாருடன் மேலும் சட்னியை வைத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: