பூரி ரைத்தா
தேவையான பொருட்கள்:
கோதுமை பூரிகள் - 4
தயிர் - 5 கப்
உருளைக்கிழங்கு - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1
வறுத்து பொடிக்க:
கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 தேக்கரண்டி
சுக்கு - 1 துண்டு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
நல்லமிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மல்லி விதை, காய்ந்த மிளகாய், சீரகம், சுக்கை இடித்து ஒரு வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
அத்துடன் பெருங்காயத்தூள், நல்லமிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் இவற்றையும் சேர்த்து ஒரு முறை மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.
கோதுமை பூரிகளை துண்டுகளாக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைத்து சிறு சிறு கட்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்து அதில் 1 டீஸ்பூன் சீனியை கரைத்து, எலுமிச்சைச்சாறு விட்டு கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தயிர் எல்லாம் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கடைந்து வைக்கவும்.
அதில் வேகவைத்த உருளைக்கிழங்கு, கோதுமை பூரி துண்டுகள், சீனியை
கரைத்து வைத்துள்ள தயிர் இவற்றை கலந்து ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
பரிமாறுவதற்கு 5 நிமிடம் முன்பு பொடித்த பொடியை சேர்த்து கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.