பூரி குர்மா

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

பச்சை பட்டாணி - 1/4 கிலோ

காலிஃப்ளவர் - 1

தக்காளி - 2

பெரிய வெங்காயம் - 1

தேங்காய் - 3 கீற்று

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

எலுமிச்சம்பழம் - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

லவங்கப்பட்டை - சிறியத் துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

நெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிருதுவாக இருக்குமாறு நன்கு பிசைய வேண்டும்.

பிசைந்த மாவினை மெல்லிய சப்பாத்திகளாய் தேய்த்து கொண்டு ஒரு பிஸ்கட் கட்டர் கொண்டு சிறிய பிஸ்கட் அளவு துண்டுகளாய் வெட்டிக் கொள்ளவும்.

இந்த சிறிய பூரிகளை சுமார் இரண்டு மணிநேரம் வெயிலில் உலர்த்தவும்.

பட்டாணியை குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு மற்றும் ஏலப்பொடி போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி சிவந்ததும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்துப் பிரட்டவும்.

சுத்தம் செய்து நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், ஊறவைத்து எடுத்த பட்டாணி ஆகியவற்றை போட்டு சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்புச் சேர்த்து வேகவிடவும்.

காய்கள் நன்கு வெந்ததும் மசித்த தக்காளியையும் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து வேகவிடவும்.

குருமா மிகவும் கெட்டியாகிவிடாமல், தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு காய வைத்துள்ள மினி பூரிகளை குருமாவில் போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.

நன்கு வெந்ததும் இறக்கி எலுமிச்சைசாறு பிழிந்து, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: