புழுங்கல் அரிசி பொங்கல்
0
தேவையான பொருட்கள்:
சாப்பாட்டு அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
முந்திரி -10
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை -சிறிது
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு -1/2 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை 20நிமிடம் ஊறவைக்கவும்.
பருப்பை வாணலியில் சிறிது வறுக்கவும்.
குக்கரில் அரிசி, பருப்பு போட்டு 41/2 கப் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும்.சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து உப்பு போட்டு நன்கு சாதத்தை மசித்து மூடிவைக்கவும்.
இஞ்சியை பொடியாக நறுக்கவும். மிளகை இரண்டாக தட்டிவைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக எடுத்துவைக்கவும்.
அதே வாணலியில் இஞ்சி, சீரகம், மிளகு, கறீவேப்பிலை தாளித்து வெந்த பொங்கலில் போட்டு வறுத்த முந்திரி போட்டு நன்கு கிளறி இறக்கவும்.