புல்கா ரொட்டி
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கரண்டி
ஜவார் மாவு - 1 கரண்டி
பாஜ்ரா மாவு - 1 கரண்டி
சோயா மாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு கலந்துக் கொள்ளவும்.
அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.
கடைசியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கையில் ஒட்டாத பக்குவதில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த உடனே ரொட்டிகளாக தீட்டவும். தவாவை அடுப்பில் வைத்து தணலை சிம்மில் வைத்து சூடுப்படுத்தவும். மெல்லிதாக வட்டமாக இட்ட ரொட்டிகளை தவாவில் போடவும். லேசாக சூடான உடனே மறுபுறம் திருப்பி போடவும், பிறகு தவாவிலிருந்து எடுத்து கேஸில் போட்டு சுட்டு எடுக்கவும்.
மிகவும் சுவையான, மிருதுவான, சத்தான மல்ட்டி க்ரெயின் புல்கா ரொட்டிகள் தயார்.