பிரெட் தக்காளி உப்புமா
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பிரெட் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4 (அல்லது) 5
வரமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மல்லித்தழை நறுக்கியது - 1/2 கப்
தாளிக்க:
பச்சை மிளகாய் - 1
பெருங்காயம் பவுடர் - சிறிது
கடுகு - கொஞ்சம்
உளுத்தம்பருப்பு - கொஞ்சம்
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்.
தக்காளி, வெங்காயம்,உப்பு, மஞ்சள் பொடி,வரமிளகாய் தூள் இவற்றை மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
வெட்டிய பிரெட் துண்டுகளின் மேல் அரைத்த விழுதினை ஊற்றீ பிசறி வைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காய பவுடர்,கறிவேப்பிலை, பச்சை மிளகாய் நறுக்கியது தாளிக்கவும். அத்துடன்பிசிறி வைத்துள்ள பிரெட் துண்டுகளை போட்டு நன்றாக பிறட்டவும்.மல்லித்தழை தூவி இறக்கவும்.