பிரட் வெஜ் உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரட்ஸ்லைஸ் -4

குடைமிளகாய் -1

கேரட் -1

வெங்காயதாள் -2

மிளகுதூள் -1 தேக்கரண்டி

எண்ணை -1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பிரட் ஓரங்களை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

கேரட் தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.குடைமிளகாயும் பொடியாக நறுக்கவும்.வெங்காயதாள் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி கேரட் போட்டு வதக்கவும். கேரட் வதங்கியவுடன் குடைமிளகாய் போட்டு வதக்கி பிரட்துண்டுகளை போட்டு வதக்கவும்.

மிளகுதூள்,உப்பு போடவும்.வெங்காயதாள் சேர்த்து எல்லாம் நன்றாக கலந்தவுடன் இறக்கி சூடாக சாப்பிடவும்.

குறிப்புகள்: