பிட்ஸா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கோப்பை

பட்டர் - 1 தேக்கரண்டி

குடைமிளகாய் - 2 மேசைக்கரண்டி

சோள மணிகள் - 2 மேசைக்கரண்டி

பட்டாணி - 1 மேசைக்கரண்டி

வெங்காயம் - 1

பூண்டு - 3 பல்

தக்காளி - 1

முட்டைக்கோசு - 1/4 கப்

கேரட் - 1/4 கப்

சர்க்கரை - ஒரு பின்ச்

சோயா சாஸ் - 1 துளி

சில்லி சாஸ் - 1 துளி

டொமேட்டொ கெட்சப் - தேவைக்கு

துருவிய சீஸ் - தேவைக்கு

ஒயிட் பெப்பர் - ஒரு பின்ச்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளை பொடியாக துருவி கொள்ளவும்.

ஒரு பேனை காய வைத்து அதில் பட்டர் உருக்கி நறுக்கின வெங்காயம், குடைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு அனைத்து காய்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக 2 நிமிடம் வதக்கவும். அத்துடன் சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு, வொயிட் பெப்பர், சர்க்கரை போட்டு வதக்கவும்.

இப்போது பிட்ஸா தோசைக்கு தேவையான தோசை மாவு, டொமேட்டோ கெட்சப், துருவிய சீஸ், வதக்கிய காய்கறி கலவை அனைத்தும் தயார்.

தோசை மாவை ஊற்றி வட்ட வடிவமாக சுழற்றி தீயை சிம்மில் வைக்கவும். அதன் மேலே வதக்கிய காய்கறி கலவையை பரவலாக தூவி சமப்படுத்தவும்.

டொமேட்டோ கெட்சப்பை அங்காங்கே தெளித்து சீஸை தூவி ஒரு தேக்கரண்டி பட்டர் போட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான பிட்ஸா தோசை ரெடி.

குறிப்புகள்: