பாசிப்பயறு இட்லி
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு - 3 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
சமையல் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கவும்:
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
காரட் - 1 (துருவியது)
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பயறு, உளுந்து தனித்தனியாக 4 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து உப்பு, சோடா சேர்த்து கரைத்து 6 - 8 மணி நேரம் புளிக்க விட்டு எடுத்து பிரிஜ்ஜில் வைத்துக் கொள்ளவும்.
காலையில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கியவை, துருவிய காரட் போட்டு வதக்கி மாவில் கலக்கவும். இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
குறிப்புகள்:
தேவைப்பட்டால் ஊற வைத்த கடலைப் பருப்பு அல்லது பொடியாக நறுக்கிய மற்ற காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்.