பலாப்பழ அடை
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 200 கிராம்,
பலாப்பழ சுளைகள் - 15,
வெல்லம் - 100 கிராம்,
சுக்கு - சிறு துண்டு,
தேங்காய் துருவல் - 1 கப்,
ஏலக்காய் - 5,
நெய் - 50 கிராம்.
செய்முறை:
பலாச்சுளைகளை பொடியாக நறுக்கவும்.வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் கரைந்து கொதிக்கும் போது, நறுக்கி வைத்துள்ள பலாச்சுளைகளை போட்டு கிளறவும்.
பலாச்சுளைகள் வெந்ததும், பொடித்த ஏலக்காய், சுக்கு, அரிசி மாவு, தேங்காய் துருவலைப் போட்டு கிளறவும்.
கெட்டியாக வரும் போது இறக்கி ஆற விடவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வாழையிலையில் அடைகளாக தட்டி, ஆவியில் வேக விடவும்.
வெந்து கெட்டியாக இருக்கும் போது எடுக்கவும். சுவையான மணமான பலாப்பழ அடை ரெடி.