பரங்கிப்பிஞ்சு அடை
தேவையான பொருட்கள்:
பரங்கி பிஞ்சு - 1 (100 கிராம் அளவு)
புழுங்கல் அரிசி - 3 கப்
கடலை பருப்பு - 1 கப்
சிவப்பு மிளகாய் - 8
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கறிவேப்பிலை - 2 மேசைக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை:
பரங்கி பிஞ்சினை சிப்ஸ் கட்டையில் மெலிதாக செதுக்கிகொள்ளவும்.
வெங்காயம், கறிவேப்பிலையை நன்றாக நறுக்கி கொள்ளவும்.
புழுங்கல் அரிசி, கடலைப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்சியில் இட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
இரண்டு அரவைக்கு பிறகு மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
கடலைப் பருப்பை தனியாக அரைக்கவும். பின்னர் நறுக்கிய பரங்கிக்காய், வெங்காயம், கறிவேப்பிலை அனைத்தையும் மாவுடன் உப்பு சேர்த்து பிசையவும்.
பின்னர் தோசை கல்லினை காய வைத்து கொஞசம் எண்ணை விட்டு அடையினை தட்டி பொன்னிறமாக வந்தவுடன் எடுக்கவும்.