பச்சை பயறு தோசை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சை பயிறு - 2 டம்ளர்
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கப்
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 5
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 6 இலைகள்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை பயிறை 2 - 3 மணி நேரம் ஊற வைத்து கழுவி மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
தோசை மாவு பதத்தில் நீர் விட்டு கரைத்து உப்பு, கறிவேப்பிலை, அரிந்த வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து கலக்கி எடுக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன், தோசை மாதிரி ஊற்றவும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சுற்றிலும் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.