பச்சைபயிறு அடை
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1/2 கப்
பச்சரிசி - 1/2 கப்
பச்சை பயிறு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை
செய்முறை:
அரிசி மற்றும் பயிறை ஊற வைத்து தேங்காய் துருவல், மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதை அடை மாவில் சேர்த்து உப்பு கலந்து தோசை போல் ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.