நூடுல்ஸ் சீஸ் ரோல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் - 2 பாக்கெட்

சீஸ் - 6 வில்லைகள்

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

சோளமாவு - ஒரு சிறிய பாக்கெட்

எண்ணெய் - 1/4 லிட்டர்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நூடுல்ஸ் பாக்கெட்டில் உள்ளபடி நூடுல்ஸைத் தயாரிக்கவும். சீஸை நீளவாக்கில் துண்டுகளாக அரியவும்.

உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து, கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.

அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து விரல் நுனியில் கலந்து விடவும்.

இக்கலவையில் இருந்து ஆரஞ்சு பழ அளவு எடுத்துக் கொண்டு உள்ளே ஒரு சீஸ் துண்டம் வைத்து நீளவாக்கில் உருட்டவும்.

சோள மாவில் இதனைப் புரட்டி எடுத்து, எண்ணெய்யில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தக்காளி சாஸுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.