நீர் தோசை
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை சுத்தம் செய்து இரவு முழுவதும் நீரில் ஊற விடவும். இத்துடன் தேங்காய் உப்பு சேர்த்து தேவையான நீர் விட்டு அரைத்து எடுக்கவும்.
பின் இன்னும் தேவைக்கு நீர் சேர்த்து மாவை நீர்க்க செய்யவும். (வழக்கமான தோசை மாவை விட நீர்க்க இருக்கும்.)
பெருந்தீயில் தோசை கல் நன்றாக காய்ந்ததும் 1 கரண்டி மாவை ஊற்றி உடனே எடுத்து ஆப்ப சட்டியில் உழட்டுவது போல் உழட்டி விடவும். மாவு ஒன்று போல் கல்லில் பரவ வேண்டும்.
பின் மிதமான தீயில் மூடி போட்டு மூடி வேக விட்டு எடுக்கவும். (தோசையின் ஓரங்கள் தூக்கிக்கொண்டு வரும் போது எடுத்து விடலாம். மெல்லிய தோசை என்பதால் வேக நேரம் பிடிக்காது, நொடிகளில் வெந்துவிடும்.)
குறிப்புகள்:
இது சிக்கன் கறி, மட்டன் கறி போன்றவையுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.