நாண் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ

ஈஸ்ட் - 2 தேக்கரண்டி

வெது வெதுப்பான பால் - 4 மேசைக்கரண்டி

சீனி - 2 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

பால் - 150 மில்லி

தயிர் - 150 மில்லி

முட்டை - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

பட்டர் அல்லது எண்ணெய் - மேலே தடவுவதற்கு

உப்பு - 1/2 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெது வெதுப்பான பாலில் ஈஸ்ட், சீனி சேர்த்து நுரைக்கவைக்கவும். ஒரு பெரிய பவுளில் மைதா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்து வைக்கவும்.

மாவின் நடுவில் குழித்து ஈஸ்ட், பால், முட்டை, தயிர், எண்ணெய் சேர்த்து மாவை பிரட்டி, பிசைந்து பெரிய உருண்டையாக்கி வைக்கவும்.

மாவு உள்ள பவுளை டைட்டாக மூடி வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும். இரு மடங்காக பெருகும்.

கமலா ஆரஞ்சு அளவு உருண்டை பிடிக்கவும், மாவை பரத்தி ஸ்லிப்பர் போல் இழுத்து விடவும். இரண்டை தயார் படுத்தவும்.

முற்சூடு செய்த அவனில் 200 டிகிரி - 300 டிகிரியில் லேசாக எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் 10 - 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.

இப்படியே இரண்டிரண்டாக சுட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

சுடச் சுட பட்டர் அல்லது எண்ணெய் தடவி விரும்பிய சைட் டிஸ் உடன் பரிமாறவும்.