நட்ஸ் அவல் உப்புமா
தேவையான பொருட்கள்:
சிவப்பு அவல் - 1 கப்
நெய் - தேவையான அளவு
கடுகு - சிறிது
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
சின்ன (அல்லது) பெரிய வெங்காயம் - 1/2 கப்
மஞ்சள் தூள் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அலங்கரிக்க:
வால்நட் - கொஞ்சம்
அக்ரூட் - கொஞ்சம்
முந்திரி - கொஞ்சம்
பாதாம் - கொஞ்சம்
பிஸ்தா - கொஞ்சம்
பனீர் - கொஞ்சம்
நிலக்கடலை - கொஞ்சம்
செய்முறை:
சிவப்பு அவலில் தண்ணீர் விட்டு அலசி தண்ணீரை வடித்து வைக்கவும். (அதன் மேல் லேசாக தண்ணீர் தெளிக்கவும்).
கடாயில் நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும்.
வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், அவல் சேர்த்து நன்கு வதக்கவும். வால்நட், அக்ரூட், முந்திரி, பாதாம், நிலக்கடலை, பிஸ்தா, பனீர் ஆகியவற்றை நெய்யில் தனித்தனியாக வறுத்து உப்புமாவின் மேல் தூவி பரிமாறவும்.