தேங்காய் அடை
0
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய்
செய்முறை:
அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை சில்லுகளாக்கவும்.
ஊற வைத்த அரிசியுடன் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை அடையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.
திருப்பி போட்டு வெந்த உடன் எடுக்கவும்.
சூடான தேங்காய் அடை ரெடி.
குறிப்புகள்:
அடையை சிறிது நேரம் நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும். முருங்கை கீரையை வதக்கி மாவுடன் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.