துவரன் இட்லி உப்புமா
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1/2 டம்ளர்
துவரம் பருப்பு - 1/4 டம்ளர்
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - கொஞ்சம்
உளுந்து - கொஞ்சம்
கடலைபருப்பு - கொஞ்சம்
செய்முறை:
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அரிசியையும், பருப்பையும் தனித்தனியே மூன்று மணி நேரம் ஊற விடவும்.
இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு நாள் முழுக்க, இரவோ (அ) பகல் முழுவதுமோ புளிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்திலோ இட்லி தட்டிலோ ஊற்றி ஆவியில் வேகவிடவும்.
வேக வைத்ததை ஆற விட்டு உதிர்த்து கொள்ளவும். உதிர்க்கும் போது கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டு தொட்டு உதிர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்து அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், உதிர்த்த இட்லியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.