தினை பொங்கல் (1)
0
தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 1/4 கிலோ
பாசிபருப்பு - 100 கிராம்
இஞ்சி - 1 துண்டு
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை
முந்திரி - 10
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் தினை அரிசியை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்
பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்
இரண்டையும் சேர்த்து 1 : 2 1/2 என்ற் விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைத்து வேகவைக்கவும்
பின் நெய்யில், முந்திரி,இஞ்சி,மிளகு, சீரகம்,பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து , வேகவைதத தினையில் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக் கலக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.