தினை பொங்கல்
தேவையான பொருட்கள்:
தினை - 2 ஆழாக்கு (1 டம்ளர்)
பாசிப்பருப்பு - 1 ஆழாக்கு (1/2 டம்ளர்)
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
நிலக்கடலை - 1 மேசைக்கரண்டி
பால் - 1 டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாசிப்பருப்பை லேசாக வறுத்து, தினையுடன் சேர்த்து நன்கு களைந்து கல் அரித்து குக்கரில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5, 6 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பாலைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், மிளகு, நிலக்கடலை, இஞ்சி துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றைப் பொங்கலில் சேர்த்து கலந்துவிடவும்.
அதனுடன் நெய் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
குறிப்புகள்:
சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.
விருப்பம் உள்ளவர்கள் முந்திரி, நெய் சேர்த்துக் கொள்ளலாம்.