தஹி பூரி (1)
தேவையான பொருட்கள்:
பானி பூரிக்குறிய பூரிகள் - 50
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
முளைக்கட்டிய பச்சைபயறு - 1/4 கப்
கெட்டியான தயிர் - 2 கப்
ஓமப்பொடி - 1/4 கப்
ஆம்சூர் பொடி - 1 தேக்கரண்டி
சாட் மசாலா - 1 தேக்கரண்டி
பேல்பூரிக்குறிய இனிப்பு சட்னி - 1/4 கப்
பேல்பூரிக்குறிய காரச்சட்னி - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். இதனுடன் முளைக்கட்டிய பயிறு, உப்பு, ஆம்சூர் பவுடர் சேர்த்து கலக்கவும்.
மற்றப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சர்விங் பிளேட்டில் நான்கு பூரிகளை எடுத்து நடுவில் ஓட்டை போடவும்.
சிறிய டீஸ்பூனால் சிறிதளவு உருளைக் கலவை எடுத்து பூரியினுள் வைக்கவேண்டும்.
தயிரை பூரிகளுக்குள் நிரப்பவும்.
காரச் சட்னி, இனிப்புச் சட்னி ஆகியவற்றையும் சேர்க்கவும்.
அதன் மேல் இன்னும் சிறிது தயிரை சேர்த்து மேலே சாட் மசாலா தூவி, கடைசியாக ஓமப்பொடி தூவி உடனே பரிமாறவும்