தக்காளி ரவா உப்புமா
தேவையான பொருட்கள்:
பொடியாக அரிந்த தக்காளி -1 கப்
ரவா - 1 கப்
வறுத்த சேமியா - 1 கை
பொடியாக அரிந்த வெங்காயம் - 3/4 கப்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த கொத்தமல்லி - 1/4 கப்
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெய் ஊற்றவும்
எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போட்டு அது வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காயம் சேர்க்கவும்.
அவை பொன்னிறமாக வறுபட்டதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைவாக வைத்து சேமியாவைத்தூவவும்.
ஒரிரு நிமிடங்கள் கழித்து ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகத்தூவவும்.
நன்கு கிளறி ரவா ஒட்டாமல் வந்ததும் இறக்கவும்.