தக்காளி பூரி (1)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்
தக்காளி - 3
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - பூரி பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து, தோல் உரித்து மசிய அரைத்துக் கொள்ளவும்.
மிளகாயையும், சீரகத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு, அரைத்த தக்காளி, மிளகாய் விழுது சேர்த்துப் பிசைந்து பூரிகளாக இட்டு பொரித்து எடுக்கவும்.