தக்காளி தோசை (2)
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3
பச்சரிசி - 1/4 கப்
புழுங்கரிசி - 1 கப்
சிவப்பு மிளகாய் - 4
வெங்காயம் - 1
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம்த்தை மெல்லியதாக நறுக்கவும். இரண்டு அரிசியையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பை 1/2 மணி ஊற வைக்கவும்.
வெங்காயம், கடலைப்பருப்பு தவிர்த்து மற்ற தேவையான பொருட்களை ஒன்றாக போட்டு மிக்ஸியில் தோசை மாவு போல அரைக்கவும்.
அரைத்த மாவில் கடலைப்பருப்பை கலந்துவிட்டு, தோசையாக ஊற்றவும், ஊற்றியதும் பொடியாக நறுக்கின வெங்காயத்தை அதில் தூவி நன்கு வேக வைத்து, திருப்பி போட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
சட்னியுடன் பரிமாறவும்.