டோஃபு நீர் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

டோஃபு - 1/2 கப்

பச்சை அரிசி - 2 கப்

சீரகம் - 1/2 tsp

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊறவைக்கவும். அரிசியை டோஃபுவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடைசியாக சீரகம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

இந்த தோசைக்கு புளிக்க வேண்டாம். அப்படியே வார்க்கலாம்.

ஆப்ப மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். மெல்லிய தோசையாக வார்க்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி இதற்க்கு பொருந்தும்.