டயாபெட்டீஸ் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டாமா (கோதுமைமா) - 250 கிராம்

கேழ்வரகுமா - 100 கிராம்

அரிசி மா - 50 கிராம்

ரவை - 50 கிராம்

சின்ன வெங்காயம்(குறுனியாக வெட்டியது) - 150 கிராம்

பச்சைமிளகாய்(குறுனியாக வெட்டியது) - சிறிதளவு

கறிவேப்பிலை(குறுனியாக வெட்டியது) - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சீரகம் - தேவையான அளவு

மிளகாய்த்தூள் (விரும்பினால்) - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டாமா(கோதுமைமா), கேழ்வரகுமா, அரிசிமா, ரவை ஆகியவற்றை தண்ணீர் விட்டு தோசை மா பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

கலக்கி வைத்துள்ள மாவுடன் சின்ன வெங்காயம், சின்ன சீரகம், உப்பு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, மிளகாய்த்தூள் இவையாவற்றையும் கலக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் தோசைகல்லில் எண்ணெய் தடவி அதில் கலக்கி

வைத்த மாவை மெல்லிய தோசையாக ஊற்றவும். ஊற்றிய தோசை நன்கு சிவந்து மொறுமொறுப்பாக விடவும்.

குறிப்புகள்:

தோசையை வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.