சோலாப்பூரி
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
ரவை - 1/2 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதா, ரவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, சோடா உப்பு இரண்டையும் கலந்து மாவில் ஊற்றி நன்கு பிசையவும். ஓரளவிற்கு பதமாக பிசைந்தவுடன் சூடான எண்ணெய் ஊற்றி மீண்டும் நன்கு பிசைந்து கொள்ளவும்.
45 நிமிடங்கள் ஊற விடவும்.
பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பிறகு அவற்றை சப்பாத்தி வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
சிறு தடிமனாகவும் தேய்க்கவும். அப்பொழுதுதான் பூரி உப்பி வரும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொன்றாக அதில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
இருபுறமும் திருப்பிப் போட்டு சற்று பொன்னிறம் வந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிட வேண்டும்.