சைனீஸ் நூடுல்ஸ் (1)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஓயிட் நூடுல்ஸ் - 1/3 பாக்கெட்

காரட் - 1

பீன்ஸ் - 5

குடைமிளகாய் - 1 சின்னது

முட்டைக்கோஸ் - 6 இலை

பெரிய வெங்காயம் - 1

அஜினமோட்டோ - 1 பின்சு

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஓயிட் நூடுல்ஸ் சுடு தண்ணீரில் போட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வேக வைக்கவும்.பின் குளிர்ந்த தண்ணீரில் அலசி தனியே வைக்கவும்.

காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்கறிகளை வதக்கவும்.சிறிது உப்பு போடவும்.

பின்னர் அஜினமோட்டோ,மிளகு தூள்,சோயா சாஸ் போட்டு வதக்கவும். காய்கறிகள் அதிகம் வேகக்கூடாது.

நூடுல்ஸ் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

குறிப்புகள்:

விருப்பம் இருந்தால் மல்லித்தழை சேர்க்கலாம்.