சேமியா பொங்கல் (1)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சேமியா - 300 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
நெய் - 6 தேக்கரண்டி
முந்திரி - 8
ஏலக்காய் - 8
திராட்சை - 8
வெல்லம் - 400 கிராம்
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றுடன் 300 கிராம் சேமியாவை போட்டு மூடி வைக்க வேண்டும்.
மூடி வைத்தது மட்டுமல்லாமல் அடுப்பை அனைத்து விட வேண்டும்.
வெல்லத்தை பாகு காய்ச்சி வைக்க வேண்டும். பாகு கெட்டியானதும் சேமியாவை வடிகட்டி கொட்டி கிளறவும்.
நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை இவைகளை வறுக்கவும்.
எல்லாவற்றையும் பொங்கலில் கொட்டி ஏலக்காயை பொடியாக மசித்து போட்டு கிளறவும். அவற்றுடன் கிளறி விட்டு அடுப்பை விட்டு இறக்கவும்.