சேமியா கிச்சடி (4)
தேவையான பொருட்கள்:
சேமியா - 200 கிராம்
நெய் - 50 மில்லி
கடலைப்பருப்பு - 1/4 கப்
தண்ணீர் - 1 கப்
பச்சைமிளகாய் - 5
வெங்காயம் - 100 கிராம்
துருவிய தேங்காய் - 1 கப்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சேமியாவை பிரித்து பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து வெங்காயத்தை வதக்கி வைத்துக் கொள்ளவும்.
அதனுடன் கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடலைப்பருப்பு அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து விட்டு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.
கொதிவந்தவுடன் சேமியாவை போட்டு கிளற வேண்டும். பின்பு தேங்காயை போட்டு நெய்யை ஊற்றி சிறிதளவு உப்பு போட்டு நன்றாக கிளறவும். பின்பு இறக்கி பரிமாறவும்.