சேமியா உப்புமா (2)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சேமியா - 200 கிராம்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பினை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளூத்தம்பருப்பு, கறிவேப்பிலைப் போட்டுத் தாளிக்கவும்.

இத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

வதக்கியபிறகு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் வறுத்து வைத்துள்ள சேமியாவை அதில் போட்டு கிளறவும்.

சேமியா வெந்து கெட்டியானவுடன் இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: