சீரக ரொட்டி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாவை கலக்க:

கோதுமை மாவு - 1 கப்

மைதா மாவு - 1 கப்

சோயா பால் - 1 டம்ளர்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

நடுவே வைக்க:

மைதா - 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - சுடுவதற்கு

செய்முறை:

மாவை கலப்பதற்கான பொருட்களை ஒன்று சேர்த்து சோயா பாலை கொண்டு நன்கு பிசையவும். நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் மூடி போட்டு வைத்து விடவும்.

மைதா, சீரகம், மிளகாய்த்தூள் இவைகளுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவில் கொஞ்சம் பெரிய எலுமிச்சை அளவாக உருண்டைகளை தயாரித்து கொண்டு சப்பாத்தி கட்டையில் சிறிது தொடு மாவை கொண்டு திட்டமாக வார்த்துக் கொள்ளவும்.

பின் சிறிது எண்ணெயை முழுவதும் தடவி விட்டு கலந்து வைத்திருக்கும் சீரக கலவையை சிறிது எடுத்து பரவலாக தடவிக் கொள்ளவும்.

சீரக கலவை தடவிய சப்பாத்தியை முதலில் மேலும் கீழ்புறமும் இருக்கும் பகுதியை எடுத்து படத்தில் உள்ளது போல் மடிக்கவும்

பின்னர் இடது மற்றும் வலபுறம் இருக்கும் பகுதிகளை உள்நோக்கி மடிக்கவும்.

இது போன்றே எல்லா உருண்டைகளையும் செய்துக் கொள்ளவும்.

பின்பு முதலில் மடித்ததை எடுத்து சிறிது தொடு மாவை தொட்டு கொண்டு திட்டமாக வார்த்து சூட இருக்கும் தோசை தவாவில் போடவும்.

மேலே லேசாக எண்னெயை தடவி விட்டு அடி லேசாக சிவக்க ஆரம்பிக்கும் போது திருப்பி போட்டு அந்த பக்கத்திலும் சிறிது எண்ணெயை தடவி கிழே சிவந்ததும் இன்னொரு முறை திருப்பி போட்டு விட்டு சிறுது நேரத்தில் எடுத்து விடவும். இதை வெறுமெனவே சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

குறிப்புகள்:

சன்னா மசாலா, இதர குருமாவுடனும் சாப்பிட நன்றாகவே இருக்கும்.