சீனிச்சம்பல் பரோட்டா
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 3
வெங்காயம் - 3 பெரியது
பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
பிரவுன் சீனி - 1 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை மெல்லிய நீள துண்டுகளாக வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதில் வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கிளறி மூடி அவிய விடவும். வெங்காயத்தை வதக்கும் போது இடையிடையே அடிப்பிடிக்காது கிளறி விடவும்.
வெங்காயம் நன்கு அவிந்து வதங்கி பிரவுண் நிறமானதும் அதனுள் புளிக்கரைசலை சேர்த்து கிளறவும். புளிக்கரைசலிற்குப் பதிலாக வினிகரையும் சேர்க்கலாம்.
கலவை நன்கு வற்றி ஓரளவு சுருண்டதும் பிரவுன் சீனியை சேர்த்து கிளறி இறக்கவும். Sweet onion பாவித்தால் சீனி சேர்க்கத் தேவையில்லை.
இதனை அனைத்து வகையான உணவுகளுடனும் பக்க உணவாக உண்ணலாம். ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும். எடுக்கும் போது சுத்தமான காய்ந்த கரண்டியை உபயோகிக்கவும்.
சீனி சம்பல் தயாரித்த பின்பு தோசை கல்லிற்கு சிறிது எண்ணெய் தடவி பரோட்டாவினை போட்டு சுடவும்.
பின்னர் அதனை மறு பக்கம் புரட்டி போட்டு அதன் மேல், ஒரு பாதி அளவிற்கு ஒரு கரண்டி சீனி சம்பலை வைத்து பரப்பி மறு பாதியால் மூடவும்.
இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு சுட்டெடுக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு பக்க உணவு எதுவும் தேவையில்லை.