சிறு பயறு புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

முளைவிட்ட சிறு பயறு - 2 கப்

துருவிய தேங்காய் - 1 கப்

பூண்டு - 5 பல்

மிளகுப்பொடி - 1/2 தேக்கரண்டி

சீரகபொடி - 1/2 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

செய்முறை:

அவலை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

தேங்காய் துருவல், பூண்டு, மிளகு பொடி, சீரகப்பொடி, மஞ்சள் பொடி இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

பின் ஊற வைத்த அவலுடன், முளை விட்ட சிறு பயறையும் அரைத்த கலவைகளையும் ஒன்றாக சேர்த்து கிளறி தேங்காய் எண்ணெயை விட்டு சாப்பிடவும்.

ருசிக்கு தேவையானால் சிறிது உப்பை சேர்த்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: