சிறுபயறு புட்டு
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சிறு பயறு - 500 கிராம்
சீனி - 300 கிராம்
தேங்காய் - 1
ஏலக்காய் - 4
நெய் - 25 கிராம்
செய்முறை:
முதலில் சிறுபயறினை ஊற வைத்து தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஊறவைத்த பயிற்றினை அரைத்து எடுத்து, ஒரு இட்லி பானை அல்லது குக்கரில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
வேக வைத்து எடுத்த மாவினை நன்கு உதிர்த்துக் கொண்டு, அதனுடன் சீனி, துருவியத் தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவையெனில் அரைச்சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.