சிறப்பு முட்டை தோசை
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முட்டை - 2 என்னம்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1
தக்காளி (பொடிதாக நறுக்கியது) - 1
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 3 சிட்டிகை
எண்ணைய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை போட்டு 1 நிமிடம் நன்கு வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி பின் வதக்கிய வெங்காய கலவையை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காயவைத்து தோசையை ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டை கலவையை கொஞ்சம் ஊற்றி நன்கு பரத்தவும். தோசையை சுற்றி எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.