சிக்கன் மசாலா தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 லிட்டர்

சிக்கன் நெஞ்சு பகுதி - 500 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

மல்லி கீரை - ஒரு பிடி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி

சீரகப்பொடி - 1 தேக்கரண்டி

மிளகுப்பொடி- 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் மசாலா:

முதலில் இறைச்சியை கழுவி முள் நீக்கி வைக்கவும், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி கீரை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும், பின்பு அதில் இறைச்சியை போட்டு வேக விடவும் வெந்த பின்பு எடுத்து ஆற விடவும். பின்பு மிக்ஸியில் இட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்,

பின்பு ஒரு நாண்ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.

பின்பு அரைத்த இறைச்சியை போட்டு கிளறவும். பின்பு மிளகாய்பொடியை போட்டு கிளறவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி கீரை ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கிய பின்பு எல்லா மசாலா பொருட்களையும் சேர்த்து உப்பு சேர்க்கவும். வெந்த பின்பு இறக்கி ஆறவிடவும்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் மெல்லிய தோசையாக இடவும், அதன் மேல் சிக்கன் மசாலாவை மேலே பரவினாற்போல் இடவும். மேலேயும் ஓரத்திலும் சிறிது எண்ணெய் விடவும் தோசை முறுகி வந்ததும் திருப்பி போடாமல் எடுக்கவும். இதுவே சிக்கன் மசாலா தோசை.

குறிப்புகள்: